Skip to main content

Posts

Showing posts from February, 2015

நிழல் தேடும் மரம்!!

அன்புள்ள மனிதா!! சுவாசமின்றி நீ தவிக்காமல் இருக்க.. உயிர்காற்று உமிழ்ந்தேன்... தாகம் என்பதை நீ அறியாமல் இருக்க.. மழைநீர் சுரந்தேன்... பசி உன் மீது படராமல் இருக்க... விளைச்சல் கண்டேன்... பனிவிழும் இரவுகளில் சுகமாய் குளிர்காய... சரகாய் உதிர்ந்தேன்... வெயிலில் நீ வாடாதிருக்க நிழல் தரவே... கிளைகள் கொண்டேன்... உனக்கென வாழ்ந்த போதேலாம் எண்ணிக் கொண்டேன்.. நான் உன் தாய் மரம் ! நீ என் சேய் வரம் ! என்று ! இப்போது தான் தெரிகிறது ! பெற்ற தாய்க்கு முதியோர் இல்லம் ! அதில் நானுமோர் அங்கம் ! அன்னையாய் அல்ல ! அணைக்கும் தூணாய் ! - இப்படிக்கு நிஜமெலாம் உனக்கு கொடுத்து விட்டதால் நிழல் தேடி அலையும் மரம் !!