தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் தலைப்ப்பிட்டு ஒரு அஞ்சலை அஞ்சலியாய் அனுப்பி இருந்தேன் நா.முத்துக்குமார் அவர்களுக்கு. மறைந்தும் நம் மனதிலிருந்து நீங்காத அவருக்கு மறுபடியும் அதையே சமர்ப்பிக்கிறேன்! அமைதியாய் அமரராவீர்! என்று வேண்டுவேன் ஆனால் கவிஞன் மனம் என்றும் சிந்தனையில் சூழ்ந்திருக்கத்தானே செய்யும்..மாற்ற நான் யார்?? அன்பு வணக்கம்! நான் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் மின் அஞ்சல் இது...ஆம்! பாரதிக்கும், தாசனுக்கும்,கல்கிக்கும்,சுஜாதா வுக்கும் எழுதும் பாக்கியம் கிட்டவில்லை! எழுதும் முறைகள் நான் அறியவில்லை.. அறிந்திருந்தாலும் பின்பற்றுதல் ஐயத்துக்கு உரிய விஷயம்.. சுற்றி வளைத்தது போதுமென்று எண்ணி, இனியும் உங்கள் நேரத்தை வீன் செய்ய விருப்பமின்றி, மையக்கருத்துக்கு வந்துவிடுகிறேன். திரைப்பட பாடல்கள் மூலம்தான் நம் முதல் சந்திப்பு.. வைரமுத்து, வாலி போன்றோரோடு பாடல்களில் தமிழின் இனிமை குன்றிவிடும் என்று ஏங்கிக் கிடந்த நிலையில்.. வரமாய் உங்களையும் தாமரை அவர்களையும் தமிழ் தாய் பெற்றுக்கொண்டாள்! எங்கேயோ கேட்ட மயக்கம்...உங்கள் பாடல்கள் தந்து கொண்டு இருக்கையில..... இன்று என் நண்பன் அ...