தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் தலைப்ப்பிட்டு ஒரு அஞ்சலை அஞ்சலியாய் அனுப்பி இருந்தேன் நா.முத்துக்குமார் அவர்களுக்கு.
மறைந்தும் நம் மனதிலிருந்து நீங்காத அவருக்கு மறுபடியும் அதையே சமர்ப்பிக்கிறேன்!
அமைதியாய் அமரராவீர்! என்று வேண்டுவேன் ஆனால் கவிஞன் மனம் என்றும் சிந்தனையில் சூழ்ந்திருக்கத்தானே செய்யும்..மாற்ற நான் யார்??
உங்கள் சொற்கள்,

அன்பு வணக்கம்!
நான் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் மின் அஞ்சல் இது...ஆம்! பாரதிக்கும், தாசனுக்கும்,கல்கிக்கும்,சுஜாதா வுக்கும் எழுதும் பாக்கியம் கிட்டவில்லை! எழுதும் முறைகள் நான் அறியவில்லை.. அறிந்திருந்தாலும் பின்பற்றுதல் ஐயத்துக்கு உரிய விஷயம்..
நான் ஒரு எழுத்தாளருக்கு எழுதும் முதல் மின் அஞ்சல் இது...ஆம்! பாரதிக்கும், தாசனுக்கும்,கல்கிக்கும்,சுஜாதா
சுற்றி வளைத்தது போதுமென்று எண்ணி, இனியும் உங்கள் நேரத்தை வீன் செய்ய விருப்பமின்றி, மையக்கருத்துக்கு வந்துவிடுகிறேன்.
திரைப்பட பாடல்கள் மூலம்தான் நம் முதல் சந்திப்பு.. வைரமுத்து, வாலி போன்றோரோடு பாடல்களில் தமிழின் இனிமை குன்றிவிடும் என்று ஏங்கிக் கிடந்த நிலையில்.. வரமாய் உங்களையும் தாமரை அவர்களையும் தமிழ் தாய் பெற்றுக்கொண்டாள்!
எங்கேயோ கேட்ட மயக்கம்...உங்கள் பாடல்கள் தந்து கொண்டு இருக்கையில..... இன்று என் நண்பன் அளித்த அணிலாடும் முன்றில், இந்த அஞ்சலை உங்களுக்கு அஞ்சலியாக செலுத்தச் செய்கிறது!

இது வாழ்த்து மடல் அல்ல! ஓர் நன்றியுரை!! நான் செல்லாத இடங்களுக்கு என்னை இட்டுச்சென்றதற்காக! நான் பழகாத உறவுகளின் பாசத்திற்கு என்னை பாத்திரம் ஆக்கியதற்காக!
நான் வாழும்...வளரும்..நகரச் சூழலில் இப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கு கிடைக்கப்போவதில்லை! உங்கள் பார்வையில் ஒவ்வொரு உறவுக்கும் ஒவ்வொரு வடிவங்கள்... என் பார்வையில் வெவ்வேறு வடிவங்கள்.. ஆனால் நீங்கள் சித்தரித்த காட்சியின் அழகு வேறுபடவும் இல்லை, குன்றவும் இல்லை! அன்பின் அழகு என்றும் அழியாது!! நானும் வளர்ந்த பின் இதுபோன்ற இனிய படைப்புகளை இந்த உலகிற்கு சீதனமாக விட்டுச்செல்ல ஆசை!

நீங்கள் இது போன்ற பல அஞ்சல்களை கண்டிருக்கலாம்! ஆனால் இது கொஞ்சம் மாறுபட்டது! இதை எழுதுபவள் உங்கள் இரசிகை அல்ல! காதலி! காமத்தின் நிழலும் படாத காதல் கொண்ட தோழி! (உங்கள் மனைவி என்னை தவறாக எண்ணிக் கொண்டால் என் மன்னிப்பு ! )
பி.கு - இதை படிப்பவர் நா.முத்துக்குமாரின் காரியதரிசியாகவோ வேறு அலுவலராகவோ இருந்தால் தயை கூர்ந்து பதில் எழுதி உங்கள் நேரத்தை வீன் செய்ய வேண்டாம்!
எதையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை! இது ஒரு அன்பின் வெளிப்பாடு!

இப்படிக்கு
அருமை தோழி !
அருமை தோழி !
Comments
Post a Comment