This is not an ode to the hundreds of little flowers that lost their lives in the recent terrorist attack in Peshawar... It's just a warning to those criminals!
Don't pity the dead! Pity the living! And above all pity those who live without love!!
பாலைவனத்தில் பூ பூக்குமா ?
நீரின்றி பயிர்தான் வளருமா ?
சண்டை செய்தால் இன்பம் பெருகுமா ?
இரத்த வெள்ளத்திலிருந்து மனிதம்தான் தப்புமா ?
பரிசாய் கிடைத்த வாழ்வை
பலியிட்டு கரியாக்க
உரிமம் யார் வழங்கினார் ?
அன்பால் செழித்த பூங்காவை
அரக்கத்தனத்தால் ஒழிக்க
அனுமதி யார் பெற்றுவந்தார் ?
அமைதி எங்கள் உரிமை !
அதை கெடுக்க கொள்ளாதே வலிமை !
கொள்ளுதலும் கொல்லுதலும் மடைமை!
கொலையாளிகளை அடக்குவது கடமை !
அஹிம்சைக்கே பேர்போன மஹாத்மாவும்
அன்பின் உருவான தெரஸாவும்
வாழ்ந்த இவ்வையத்தில்,
ஆயுதங்களை தாங்கி அழிக்கும்
ஆணவம்கொண்டவர் எப்படி தான் பிறந்தாரோ ??
அழகு ரோஜாவின் காம்பின்கண்
அரக்கமுள் தோன்றிவிட்டது போல் !
சண்டைகள் செய்து ,
சமரசம் விடுத்து ,
சுடுகாட்டில் சுயராஜ்ஜியம்
சுதந்திரமாய் செய்யவேணுமானால்,
நேரே நரகத்திற்கே சென்றிடுங்கள் !
நேற்றிலேயே வாழ்ந்திடுங்கள் !
சொர்க்கமாய் ஓர்பூமி
சொந்தமாய் பெற்றுள்ளோம் !
சுகமான வாழ்வை
சுத்தமான மனதுடனே ,
மக்கள் இங்கு வாழ்கிறோம் !
மாக்கள் எங்காவது போய்தொலையுங்கள் !!
Don't pity the dead! Pity the living! And above all pity those who live without love!!
பாலைவனத்தில் பூ பூக்குமா ?
நீரின்றி பயிர்தான் வளருமா ?
சண்டை செய்தால் இன்பம் பெருகுமா ?
இரத்த வெள்ளத்திலிருந்து மனிதம்தான் தப்புமா ?
பரிசாய் கிடைத்த வாழ்வை
பலியிட்டு கரியாக்க
உரிமம் யார் வழங்கினார் ?
அன்பால் செழித்த பூங்காவை
அரக்கத்தனத்தால் ஒழிக்க
அனுமதி யார் பெற்றுவந்தார் ?
அமைதி எங்கள் உரிமை !
அதை கெடுக்க கொள்ளாதே வலிமை !
கொள்ளுதலும் கொல்லுதலும் மடைமை!
கொலையாளிகளை அடக்குவது கடமை !
அஹிம்சைக்கே பேர்போன மஹாத்மாவும்
அன்பின் உருவான தெரஸாவும்
வாழ்ந்த இவ்வையத்தில்,
ஆயுதங்களை தாங்கி அழிக்கும்
ஆணவம்கொண்டவர் எப்படி தான் பிறந்தாரோ ??
அழகு ரோஜாவின் காம்பின்கண்
அரக்கமுள் தோன்றிவிட்டது போல் !
சண்டைகள் செய்து ,
சமரசம் விடுத்து ,
சுடுகாட்டில் சுயராஜ்ஜியம்
சுதந்திரமாய் செய்யவேணுமானால்,
நேரே நரகத்திற்கே சென்றிடுங்கள் !
நேற்றிலேயே வாழ்ந்திடுங்கள் !
சொர்க்கமாய் ஓர்பூமி
சொந்தமாய் பெற்றுள்ளோம் !
சுகமான வாழ்வை
சுத்தமான மனதுடனே ,
மக்கள் இங்கு வாழ்கிறோம் !
மாக்கள் எங்காவது போய்தொலையுங்கள் !!
Comments
Post a Comment