நாம் ,
அற்பமாய் வீழாமல்
நிஜமான அன்புடன் இரங்கல் செய்வோர், போலி புலம்பல்களுள்ளே சிக்கித் தவிப்பதை பார்த்ததும் தோன்றியது.... தேசத் தந்தையின் முகம் பார்க்க தேனிக்கூடென சேர்த்த கோடிகள் ! பெரியாருக்கு மாலையிட்டுவிட்டு பெருந்திரளாய் கூட்டம் ஜோசியன் வாயிலில் ! கலாமின் கனவுகளை நினைவாக்க கண்மணிகள் மூழ்கினர் முகப்புத்தகத்தில் ! 'அம்மா'வின் மரணம் அலைஅலையாய் போலிக்கண்ணீர் ! மலர்வளையங்களில் மட்டுமே மரியாதை ! அழுகையால் மட்டுமே அஞ்சலி ! கண்ணியமிலா கதறல் ! நாடகம் தான் இரங்கல் ! மாண்டோருடன் மறங்களும் , மண்ணுள்ளே மக்கிக் கிடக்கையில்... மாயத்தோற்றங்களால் ஆன குறும்படம் மக்களின் மனத்திரையில் !

Comments
Post a Comment