Skip to main content

Posts

நிழல் தேடும் மரம்!!

அன்புள்ள மனிதா!! சுவாசமின்றி நீ தவிக்காமல் இருக்க.. உயிர்காற்று உமிழ்ந்தேன்... தாகம் என்பதை நீ அறியாமல் இருக்க.. மழைநீர் சுரந்தேன்... பசி உன் மீது படராமல் இருக்க... விளைச்சல் கண்டேன்... பனிவிழும் இரவுகளில் சுகமாய் குளிர்காய... சரகாய் உதிர்ந்தேன்... வெயிலில் நீ வாடாதிருக்க நிழல் தரவே... கிளைகள் கொண்டேன்... உனக்கென வாழ்ந்த போதேலாம் எண்ணிக் கொண்டேன்.. நான் உன் தாய் மரம் ! நீ என் சேய் வரம் ! என்று ! இப்போது தான் தெரிகிறது ! பெற்ற தாய்க்கு முதியோர் இல்லம் ! அதில் நானுமோர் அங்கம் ! அன்னையாய் அல்ல ! அணைக்கும் தூணாய் ! - இப்படிக்கு நிஜமெலாம் உனக்கு கொடுத்து விட்டதால் நிழல் தேடி அலையும் மரம் !!

7 Paradoxes of My Life

I have been consciously avoiding bringing up my personal life while writing this blog.. But now I have decided to make an exception.. Maybe few generous souls might even be interested in the stupidities of a young girl's life! Now coming to the point where I should have begun... Here are a few ironical facts about me... 1. I have a boyish attitude (my choices..tastes...thought pattern..) I like a lotta characteristics that are common in men and very rare in women..  Having said that, AM VERY PROUD ABOUT BEING A GIRL!! 2. Sunrise- it's a wonderful start to a day. Waking before the sun makes u energetic.. agreed! But it's the most amazing time to sleep! It's a gift to yourself! 3. Some people- I love them and dislike them so much, both at the same time!When in love, am unconditional. But in life it's impossible to live without judging, specially the people around u.. 4. I hate to do things just to please others.. And yet the hardest thing for me to do is to say ...

Welcome 2k15!!

We all know that time flies.. But celebrating the beginning of a new year brings in a detailed realization of how the past 365 days have passed without us being conscious of it.. some days were boring.. some tiring.. some exciting.. and some annoying.. May be To keep us in the track of timeline, we celebrate a few days.. To remind us of the most important commodity we all possess.. here are a few lines! எழுதும்போதே கறைகிறது... என் பேனாமை அல்ல ! அனைவருக்கும் சம்மானது... அன்புக் கடவுள் அல்ல ! பொக்கிஷம் போன்றது... பொற்காசும் அல்ல ! உழைத்தால் ஊதியம்தரும்... உழுநிலம் அல்ல ! நிற்காமல் சுழலும்... நிலவும் அல்ல ! புத்தியுள்ளவன் பயன்படுத்துவான்... புதுவாய்ப்பும் அல்ல ! பணம்கொடுத்து பெறமுடியாது... பண்பும் அல்ல ! காயங்கள் ஆற்றிடும்... கருணை அல்ல ! மாதங்கள் செய்திடும்... மந்திரம் அல்ல ! சேமிக்க முடியாது... சௌந்தர்யம் அல்ல ! பிரிந்துவிட்டால் வாராது... உயிரும் அல்ல ! உயிருக்கு மூலதனம்... பயிரும் அல்ல ! நாம் ,  தேடும்போதே தொலைகின்ற... தேனான நேரமது !!

PITY THE LIVING!!

This is not an ode to the hundreds of little flowers that lost their lives in the recent terrorist attack in Peshawar... It's just a warning to those criminals! Don't pity the dead! Pity the living! And above all pity those who live without love!!  பாலைவனத்தில் பூ பூக்குமா ? நீரின்றி பயிர்தான் வளருமா ? சண்டை  செய்தால் இன்பம் பெருகுமா ? இரத்த வெள்ளத்திலிருந்து மனிதம்தான்                                                                தப்புமா ? பரிசாய் கிடைத்த வாழ்வை பலியிட்டு கரியாக்க உரிமம் யார் வழங்கினார் ? அன்பால் செழித்த பூங்காவை அரக்கத்தனத்தால் ஒழிக்க அனுமதி யார் பெற்றுவந்தார் ? அமைதி எங்கள் உரிமை ! அதை கெடுக்க கொள்ளாதே வலிமை ! கொள்ளுதலும் கொல்லுதலும் மடைமை! கொலையாளிகளை அடக்குவது கடமை ! அஹிம்சைக்கே பேர்போன மஹாத்மாவும் அன்பின் உருவான தெரஸாவும் வாழ்ந்த இவ்வையத்தில், ஆயுதங்களை தாங்கி அழிக்கும் ...

Time machines that you failed to take on!

Wondering how the discovery of the time machines, that have captured the fantasy of the numerous people across the globe, have slipped through your notice?? Here is how!        When you walk on the road carelessly passing blocks and blocks of buildings with so many hoardings, it is very much plausible that you never gave second thoughts to the one announcing "LIBRARY"! After all it is a very modest building that rarely stands out of the crowd. So why take a second look? Why give a damn about books that are clearly nothing but a part of a nerd's life? Why spend so much time on a novel, when you need all that precious time of yours to be active on social networking, pretending to be famous , successful and witty? Why read a book, when it will be released as a movie and you can watch that? Why read comics, when you can watch cartoons? Ya, why make reading as a pass-time when you cant even tolerate the time spent with books at school/college? If these were the question...

சுவடுகள் !

நாம் , அற்பமாய் வீழாமல்  அர்த்தமுடன் வாழ்ந்திட , நிழற்போல் மறையாமல்  நிஜமாய் செயலாற்றிட , விலங்குபோல் மடியாமல்  வீரர்களாய் உடல்நீத்திட , பழமைதனில் உழலாமல்  புரட்சியுடன் புணர்ந்திட , தன்னலகூண்டுக்குள் சிக்காமல்  தியாகப்பறவைகலாய்  பறந்திட , காமச்சிறையில் அடைப்படாமல்  காதல்வாழ்வில் உறைந்திட , நம் ,  தங்கத்தமிழ் பெற்றெடுத்த  தவப் புதல்வர்கள் , காலமெனும் கடற்கரையில் , விட்டுச் சென்ற  இலக்கியச் சுவடுகள் !

என்ன பயன் ?

கண்ணியத்தோடு வாழ வேலை கனவைத் தொடர சாலை! - இரண்டும் தாராத  கல்வி கற்று என்ன பயன் ? இன்பத்தை வகுத்து விட்டு  இழப்பை பெருக்கிக் கொண்டு, முதிர்வதற்கு ,  இளமை இழந்து என்ன பயன் ? சட்டைப் பையில் காந்தியில்லாதவருக்கு  சற்றே நீதி வழங்காத  சட்டம் காத்து என்ன பயன் ? மனித உணர்வை மதியாத  மங்கும் நாட்டை நிமிர்த்தாத  மக்கள் ஆட்சியில் என்ன பயன் ? பகுத்தறிவு சிறிதும் இல்லாமல்  பண்பையும் அன்பையும் தேடாமல் - வாழும்  பணம் படைத்தவரால் என்ன பயன் ? ஈதல் தான் இல்லையென்றால்  ஈரம் கூட இல்லாமல்  ஈட்டி தாங்குபவரால் என்ன பயன் ? இச்சகத்து நடக்கும் கொடுமையெலாம் - பார்த்துவிட்டும்  இருகண்ணிருந்தும் குருடாய் விளங்கும்  இறைவன் இருந்தாலும் என்ன பயன் ? அறிவுக் கண் திறவாமல்  அன்பு மொழி கேளாமல் , திரிபவர்க்கு , அழகுக் கவிதை படித்தும் என்ன பயன் ?