அன்பிலா நெஞ்செனும் அடித்தளத்தில்
ஆணவக் கோட்டை கட்டி
இன்பப் புதுமனை புகுவிழாவிற்கு
ஈசனை சாட்சியாய் வைத்து
உழைத்து வாழும் எளியவரின்
ஊதியத்தில் ஊழல் செய்து
எட்டுத்தலைமுரைக்கு சொத்து சேர்த்து
ஏக்கங்களை தினமும் பார்த்து
ஐயங்களை மூட்டையாய் சேர்த்து
ஒப்பனைகளில் அழகைக் கண்டு
ஓய்விலும் வேலைத் தேடி
ஔதடத்தை உணவாய் உண்டு
கபடங்களினுள் மெய்யை மூடி
சட்டங்களுள் ஓட்டை போட்டு
திட்டங்கள் பலவும் தீட்டி
குண்டர்களை தலைவர் ஆக்கி
பகையை பொழுதும் கூட்டி
மிகயாய் வாக்குகள் தந்து
குறைவாய் உதவிகள் செய்து - உயர்
பண்பை முற்றிலும் மறந்து
பகட்டாய் வாழ்க்கைத் தள்ளும்
பயனற்ற நிழல் மனிதர்கள்!
Comments
Post a Comment