பாட்டுக்கொரு புலவன் பாட்டைக் கேட்டு கிறுகிறுத்து போன நெஞ்சம் கிறுக்கியது.....
அச்சம் தவிர்த்த அஞ்சானோ ?!
ஆதிக்க வேரறுத்த வீரனோ ?!
இன்றமிழ் வானில் உதித்த இளஞ்சூரியனோ ?!
ஈட்டிச்சொற் கொண்டு பேதமை வதைத்த ஈசனோ ?!
உள்ளுவதெலாம் உயர்வாய் உண்ணிய உத்தமனோ ?!
ஊமைக்கு குரல் தந்து ஊக்கியவனோ ?!
எழுச்சியை ஏற்றிவைத்த எளியவனோ ?!
ஏறு போல் நடந்த ஏகனோ ?!
ஐயங்கள் பல தெளித்த ஐயனோ ?!
ஒப்பிலா புகழ் படைத்த ஒருவனோ ?!
ஓங்குதமிழை அழகாய் சித்தரித்த ஓவியனோ ?!
ஔவையின் ஆத்திசூடியில் கலந்த பழமை விடம் முறித்த ஔடதமோ ?!
எஃகுபோல் உறுதி கொண்ட எந்திரனோ ?!
பெண்மை ஆதரித்த புலவனோ ? - பாரதி !
புதுமைத் தேருக்கு நீயே சாரதி !
அச்சம் தவிர்த்த அஞ்சானோ ?!
ஆதிக்க வேரறுத்த வீரனோ ?!
இன்றமிழ் வானில் உதித்த இளஞ்சூரியனோ ?!
ஈட்டிச்சொற் கொண்டு பேதமை வதைத்த ஈசனோ ?!
உள்ளுவதெலாம் உயர்வாய் உண்ணிய உத்தமனோ ?!
ஊமைக்கு குரல் தந்து ஊக்கியவனோ ?!
எழுச்சியை ஏற்றிவைத்த எளியவனோ ?!
ஏறு போல் நடந்த ஏகனோ ?!
ஐயங்கள் பல தெளித்த ஐயனோ ?!
ஒப்பிலா புகழ் படைத்த ஒருவனோ ?!
ஓங்குதமிழை அழகாய் சித்தரித்த ஓவியனோ ?!
ஔவையின் ஆத்திசூடியில் கலந்த பழமை விடம் முறித்த ஔடதமோ ?!
எஃகுபோல் உறுதி கொண்ட எந்திரனோ ?!
பெண்மை ஆதரித்த புலவனோ ? - பாரதி !
புதுமைத் தேருக்கு நீயே சாரதி !
Comments
Post a Comment