நான்குமறை ஓதும் ஆர்வமில்லை !
நான்குதிசையினரையும் சேர்க்கும் ஆசையுண்டு !
மெக்காவிற்கு திருப்பயணம் சென்றதில்லை !
மெலியோர்க்கு சிறுதொண்டு செய்ததுண்டு !
ஏசுவின் மகிமை பாடியதில்லை !
ஏழைகள் படும்கொடுமை பார்த்துவெகுண்டதுண்டு !
உண்டியல்கள் நிரப்ப உழைத்ததில்லை !
உணவை பகிர்ந்து உண்டதுண்டு !
கல்லில் கடவுள் கண்டதில்லை !
கல்வியை கண்போல் காத்ததுண்டு !
சோதிடம் பார்த்திடும் சோம்பலில்லை !
சோதனைகள் தாண்டி சோபித்ததுண்டு !
பெண்மையை அடிமையாக்கி பேரின்பம் கொண்டதில்லை !
பெண்ணாய்ப் பிறந்ததற்கு பெருமையில் பொங்கியதுண்டு !
மனதில் விடம் விதைக்கும் மதங்களை மதிப்பதில்லை !
மனிதநேயம் நெஞ்சில் என்றும் மலர்வதுண்டு !
சண்டைகள் தூண்டும் சாதிகள் வேண்டியதில்லை !
சமரசம் பேசி அமைதி வளர்க்கும் வேள்வியுண்டு !
பக்தியில்லை ! பாசமுண்டு !
முக்தி தேவையில்லை !
சக்தி கையிலுண்டு !
என் கடவுளிடம் முறையிடத் தேவையில்லை !
எண்ணற்ற கடவுள்களிடமிருந்து முரண்பட்டு தோன்றியதுண்டு !
அன்பே சிவமாய் கருதி
அமைதிப் போர் புரியும்
நானும் ஓர் ஆத்திகவாதி !

Comments
Post a Comment