Skip to main content

Posts

PITY THE LIVING!!

This is not an ode to the hundreds of little flowers that lost their lives in the recent terrorist attack in Peshawar... It's just a warning to those criminals! Don't pity the dead! Pity the living! And above all pity those who live without love!!  பாலைவனத்தில் பூ பூக்குமா ? நீரின்றி பயிர்தான் வளருமா ? சண்டை  செய்தால் இன்பம் பெருகுமா ? இரத்த வெள்ளத்திலிருந்து மனிதம்தான்                                                                தப்புமா ? பரிசாய் கிடைத்த வாழ்வை பலியிட்டு கரியாக்க உரிமம் யார் வழங்கினார் ? அன்பால் செழித்த பூங்காவை அரக்கத்தனத்தால் ஒழிக்க அனுமதி யார் பெற்றுவந்தார் ? அமைதி எங்கள் உரிமை ! அதை கெடுக்க கொள்ளாதே வலிமை ! கொள்ளுதலும் கொல்லுதலும் மடைமை! கொலையாளிகளை அடக்குவது கடமை ! அஹிம்சைக்கே பேர்போன மஹாத்மாவும் அன்பின் உருவான தெரஸாவும் வாழ்ந்த இவ்வையத்தில், ஆயுதங்களை தாங்கி அழிக்கும் ...

Time machines that you failed to take on!

Wondering how the discovery of the time machines, that have captured the fantasy of the numerous people across the globe, have slipped through your notice?? Here is how!        When you walk on the road carelessly passing blocks and blocks of buildings with so many hoardings, it is very much plausible that you never gave second thoughts to the one announcing "LIBRARY"! After all it is a very modest building that rarely stands out of the crowd. So why take a second look? Why give a damn about books that are clearly nothing but a part of a nerd's life? Why spend so much time on a novel, when you need all that precious time of yours to be active on social networking, pretending to be famous , successful and witty? Why read a book, when it will be released as a movie and you can watch that? Why read comics, when you can watch cartoons? Ya, why make reading as a pass-time when you cant even tolerate the time spent with books at school/college? If these were the question...

சுவடுகள் !

நாம் , அற்பமாய் வீழாமல்  அர்த்தமுடன் வாழ்ந்திட , நிழற்போல் மறையாமல்  நிஜமாய் செயலாற்றிட , விலங்குபோல் மடியாமல்  வீரர்களாய் உடல்நீத்திட , பழமைதனில் உழலாமல்  புரட்சியுடன் புணர்ந்திட , தன்னலகூண்டுக்குள் சிக்காமல்  தியாகப்பறவைகலாய்  பறந்திட , காமச்சிறையில் அடைப்படாமல்  காதல்வாழ்வில் உறைந்திட , நம் ,  தங்கத்தமிழ் பெற்றெடுத்த  தவப் புதல்வர்கள் , காலமெனும் கடற்கரையில் , விட்டுச் சென்ற  இலக்கியச் சுவடுகள் !

என்ன பயன் ?

கண்ணியத்தோடு வாழ வேலை கனவைத் தொடர சாலை! - இரண்டும் தாராத  கல்வி கற்று என்ன பயன் ? இன்பத்தை வகுத்து விட்டு  இழப்பை பெருக்கிக் கொண்டு, முதிர்வதற்கு ,  இளமை இழந்து என்ன பயன் ? சட்டைப் பையில் காந்தியில்லாதவருக்கு  சற்றே நீதி வழங்காத  சட்டம் காத்து என்ன பயன் ? மனித உணர்வை மதியாத  மங்கும் நாட்டை நிமிர்த்தாத  மக்கள் ஆட்சியில் என்ன பயன் ? பகுத்தறிவு சிறிதும் இல்லாமல்  பண்பையும் அன்பையும் தேடாமல் - வாழும்  பணம் படைத்தவரால் என்ன பயன் ? ஈதல் தான் இல்லையென்றால்  ஈரம் கூட இல்லாமல்  ஈட்டி தாங்குபவரால் என்ன பயன் ? இச்சகத்து நடக்கும் கொடுமையெலாம் - பார்த்துவிட்டும்  இருகண்ணிருந்தும் குருடாய் விளங்கும்  இறைவன் இருந்தாலும் என்ன பயன் ? அறிவுக் கண் திறவாமல்  அன்பு மொழி கேளாமல் , திரிபவர்க்கு , அழகுக் கவிதை படித்தும் என்ன பயன் ?

My Chennai!

Even though it is in my not-so-good English, I have a short birthday wish for the city that is close to my heart! Namma Chennai Chancey ila!! :D Here is a little tribute-           for the city, that never fails to contribute! Chennai or Madras, whatever you call, It will never let you fall! Walking alongside the shores of the beach, We feel success is well within reach! Enlightenment begins at V.house! Connemara is for you to browse! Celebrating everyday with funfilled night life! And wake up to the chores that are rife! Midst the crowd that rush, The city always feel afresh! Ultimate masala and glitz in Kollyood! Unlimited meals are always supergood! Climate and gals here, are too hot! Whatever you ask, we have got! If you choose to stay, it is the sweetest home! If you leave, you will only long to come! Chennai is the best in all the worlds! To praise it, am short of words!  

நானும் ஓர் ஆத்திகவாதி!

நான்குமறை ஓதும் ஆர்வமில்லை ! நான்குதிசையினரையும் சேர்க்கும் ஆசையுண்டு ! மெக்காவிற்கு திருப்பயணம் சென்றதில்லை ! மெலியோர்க்கு சிறுதொண்டு செய்ததுண்டு ! ஏசுவின் மகிமை பாடியதில்லை ! ஏழைகள் படும்கொடுமை பார்த்துவெகுண்டதுண்டு ! உண்டியல்கள் நிரப்ப உழைத்ததில்லை ! உணவை பகிர்ந்து உண்டதுண்டு ! கல்லில் கடவுள் கண்டதில்லை ! கல்வியை கண்போல் காத்ததுண்டு ! சோதிடம் பார்த்திடும் சோம்பலில்லை ! சோதனைகள் தாண்டி சோபித்ததுண்டு ! பெண்மையை அடிமையாக்கி பேரின்பம் கொண்டதில்லை ! பெண்ணாய்ப் பிறந்ததற்கு பெருமையில் பொங்கியதுண்டு ! மனதில் விடம் விதைக்கும் மதங்களை மதிப்பதில்லை ! மனிதநேயம் நெஞ்சில் என்றும் மலர்வதுண்டு ! சண்டைகள் தூண்டும் சாதிகள் வேண்டியதில்லை ! சமரசம் பேசி அமைதி வளர்க்கும் வேள்வியுண்டு ! பக்தியில்லை ! பாசமுண்டு ! முக்தி தேவையில்லை ! சக்தி கையிலுண்டு ! என் கடவுளிடம் முறையிடத் தேவையில்லை ! எண்ணற்ற கடவுள்களிடமிருந்து முரண்பட்டு தோன்றியதுண்டு ! அன்பே சிவமாய் கருதி அமைதிப் போர் புரியும் நானும் ஓர்  ஆத்திகவாதி !

'பா' ரதி!

பாட்டுக்கொரு புலவன் பாட்டைக் கேட்டு கிறுகிறுத்து போன நெஞ்சம் கிறுக்கியது..... அச்சம் தவிர்த்த அஞ்சானோ ?! ஆதிக்க வேரறுத்த வீரனோ ?! இன்றமிழ் வானில் உதித்த இளஞ்சூரியனோ ?! ஈட்டிச்சொற் கொண்டு பேதமை வதைத்த ஈசனோ ?! உள்ளுவதெலாம் உயர்வாய் உண்ணிய உத்தமனோ ?! ஊமைக்கு குரல் தந்து ஊக்கியவனோ ?! எழுச்சியை ஏற்றிவைத்த எளியவனோ ?! ஏறு போல் நடந்த ஏகனோ ?! ஐயங்கள் பல தெளித்த ஐயனோ ?! ஒப்பிலா புகழ் படைத்த ஒருவனோ ?! ஓங்குதமிழை அழகாய் சித்தரித்த ஓவியனோ ?! ஔவையின் ஆத்திசூடியில் கலந்த பழமை விடம் முறித்த ஔடதமோ ?! எஃகுபோல் உறுதி கொண்ட எந்திரனோ ?! பெண்மை ஆதரித்த புலவனோ ? -  பாரதி !                     புதுமைத் தேருக்கு நீயே சாரதி !